தமிழகத்தில் மீண்டும் உயரும் வெப்பநிலை

73பார்த்தது
தமிழகத்தில் மீண்டும் உயரும் வெப்பநிலை
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி