ஆட்டோ ஓட்டுநர் மண்டையை பிளந்த இளம்பெண் (வீடியோ)

72பார்த்தது
டெல்லி நிஹால்விஹாரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​அந்த ஆட்டோவின் பின்னால் புல்லட் பைக்கில் வந்த இளம்பெண் ஒருவர், ஆட்டோவை சைடு கொடுக்க வைப்பதற்காக ஹாரன் அடித்துள்ளார். ஆனால், ​​ஆட்டோவுக்கு முன்னால் மற்றொரு வாகனம் சென்றதால் அவரால் சைடு கொடுக்க முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இதில், ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி