ICC நடத்தும் தொடர்களில் உலக கோப்பை தொடருக்கு நிகராக கருதப்படுவது சாம்பியன் டிராபி தொடர். இது மினி உலக கோப்பை என்று ரசிகர்களால் அழைக்கப்படும். 1998ஆம் ஆண்டு முதல் சாம்பியன் டிராபி நடைபெற்று வருகிறது. 1998 - தென்னாப்பிரிக்கா, 2000 - நியூசிலாந்து, 2002 - இந்தியா, இலங்கை, 2004 - வெஸ்ட் இண்டீஸ், 2006 - ஆஸ்திரேலியா, 2009 - ஆஸ்திரேலியா, 2013 - இந்தியா, 2017- பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கோப்பையை வென்றுள்ளன. இந்தியா மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.