சென்னையை அடுத்த நெற்குன்றம், செல்லியம்மன்நகர் பகுதியைச் சேர்ந் தவர் பரத் என்பவரது மனைவி லதா (20). பரத் வழக்கம் போல நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது தனது சம்பள பணத்தை தவறவிட்டுள்ளார். இதையடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கணவன் - மனைவி இருவரும் பணத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு அதிவேகமாக சென்ற பைக் ஒன்று பெண் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.