அசாமின் கவுகாத்தி நகரில் இந்தியா சார்பில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 என்ற பேட்மிண்டன் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் மற்றும் மகளிர் இரட்டையர் என 3 பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. ஆடவர் ஒற்றையர் பிரிவில், சதீஷ் குமார் கருணாகரன், மகளிர் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வின் பொன்னப்பா மற்றும் தனீஷா கிராஸ்டோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.