தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு. தற்போதைய முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.