வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால், விரக்தி அடைந்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய காட்பாடியைச் சேர்ந்த தங்கராஜ் (52), ராஜம்மாள் (45) தம்பதியர் விபரீத முடிவை எடுத்துள்ளனர். உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.