இந்தியாவின் செஸ் தலைநகரம் தமிழ்நாடு என முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதமாக கூறியுள்ளார். உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன், "உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. நாட்டின் முதல் சர்வதேச மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர், பெண் கிராண்ட் மாஸ்டர் எல்லோரும் தமிழ்நாடுதான்" என புகழாரம் சூட்டியுள்ளார்.