சிப்காட் விடுதி திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் என்ற இடத்தை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது. இந்தியாவிலேயே பெண் பணியாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 41,000 பணியாளர்களில் 35,000 பேர் பெண்கள்” என்றார்.