கட்டணத்தைக் குறைத்த தமிழக அரசு - எதற்கு தெரியுமா ?

82பார்த்தது
கட்டணத்தைக் குறைத்த தமிழக அரசு - எதற்கு தெரியுமா ?
தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த நிலத்துக்கு அருகில் உள்ள மின்கம்பம், மின்சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் 22% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் அனைத்து தரப்பினரும் பயனடைவர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி