உத்தரப் பிரதேசத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் சிசிடிவி பதிவு மூலம் வெளிச்சத்துக்கு வந்துக்ள்ளது. மொராதாபாத்தில் மூன்று இளைஞர்கள் தெருநாயை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நாயை அவர்கள் கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் 3 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.