குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது - அமெரிக்கா

64பார்த்தது
குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது - அமெரிக்கா
இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது கவலை அளிப்பதாகவும் அது எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி