பிரிட்டன் ராணுவ அமைச்சர் மீது ரஷ்யா தாக்குதல்

57பார்த்தது
பிரிட்டன் ராணுவ அமைச்சர் மீது ரஷ்யா தாக்குதல்
தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச் சென்ற ராயல் விமானப்படையின் ஜெட் விமானத்தின் சிக்னல்களை ரஷ்யா முடக்கியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. ராணுவத் தேவைகளுக்கான பிரிட்டனின் விமானம் நேற்று முன்தினம் ரஷ்ய எல்லையருகே பறந்தபோது, சுமார் 30 நிமிடங்களுக்கு விமானத்தின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் மர்ம குறுக்கீடு நடந்ததாக பிரிட்டன் அரசின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் தற்போது தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் சூழலில் பிரிட்டனின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி