தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா, எம்எல்ஏ வேலு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.