ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் பல கோடி நபர்கள் இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஹேக்கரிடம் இந்த நிறுவனத்தின் பல கோடி நபர்களின் தனிப்பட்ட விவரங்கள், தரவுகள் சிக்கியுள்ளது. ஸ்டார் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மூலம் 3.10 கோடி நபர்களின் தகவல்களை பெற்றதாகவும், ரூ.1.25 கோடி ரூபாய்க்கு தகவல்களை தன்னிடம் விற்றதாகவும் ஹேக்கர் கூறியுள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.