சென்னை அண்ணா சாலை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி அருகே இன்று (நவ. 08) கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் போக்குவரத்துக் காவலர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். காரில் இருந்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரியான கஜேந்திரபாபு (57) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.