உயர் இரத்த அழுத்தமும், உடல் எடையும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை, எனவே உடல் எடையை குறைப்பது மிக அவசியம். குறைந்த கொழுப்பு கொண்ட அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையில் பொறித்த அதிக அளவு கொழுப்பு மற்றும் சோடியம் கொண்ட உணவுகளை தவிர்க்கவும். ஊறுகாய், அப்பளம், கருவாடு ஆகியவை ரத்த அழுத்ததிற்கு முதல் எதிரிகள். முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.