பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கற்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க். ஜெஃப்ரியும் பவித்ராவும் இணைந்து கற்களை காப்பாற்ற முயல, ராணவ் தடுக்கிறார். அப்போது ராணவை ஜெஃப்ரி தள்ளிவிட அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டிருக்கிறது. தொடர்ந்து பிக்பாஸ் டீம் ராணவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.