மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி ரூ.1.7 லட்சத்தை ஏமாற்றி உள்ளனர். மேலும், செக் பண்ண வேண்டும் என சொல்லி அந்த பெண்ணின் ஆடைகளையும் களைய வைத்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் உங்களுக்கு இதுபோல மோசடி கால் வந்தால் ஆதார், வங்கிக் கணக்குகளைப் பகிராதீர்கள்.