டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் மோதல்!

85பார்த்தது
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் மோதல்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஜுன் 9) நடைபெறவுள்ளது. அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான வெற்றியால் இந்தியா உற்சாகமடைந்தது. உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி சாதனையை தொடர ரோஹித் ஷர்மா தரப்பு ஆர்வமாக உள்ளது. அக்ஷருக்கு பதிலாக குல்தீப் அணியில் இடம் பெறுவார் என தெரிகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி