டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்! முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி

77பார்த்தது
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்! முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி
9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி