வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் அரைசதமடித்த ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (3,433 ரன்கள்) குவித்த இந்திய வீராங்கனையாக மாறி சாதனை படைத்துள்ளார். முதல் இடத்திலிருந்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (3,415 ரன்கள்) சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். 9ஆவது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.