நெல்லை உவரியில் அமைந்துள்ளது சுயம்பு லிங்க சுவாமி கோயில். பொதுவாக சிவன் கோயில்களில் மாதம் ஓரிரு நாட்கள் சூரிய பூஜை நடைபெறும். ஆனால் இந்த கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுகிறது. அதாவது மார்கழி மாதம் முழுவதும் சூரியன் சுயம்பு லிங்கத்தை வழிபடுவதாக ஐதீகம். சூரிய திசை இருப்பவர்கள் மார்கழி மாதம் அதிகாலையில் இந்த திருத்தலத்தில் வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.