ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். அவர் ஹெர்னியா பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு
சூர்யா குணமடைய குறைந்தது 8 முதல் 9 வாரங்கள் ஆகும். இதன் காரணமாக
ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவர் விளையாடாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. மேலும்,
ஐபிஎல் தொடரில் இருந்து அவர் முழுமையாக விலகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக
கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.