இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்த சூப்பர் கார்.!

60பார்த்தது
இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்த சூப்பர் கார்.!
இந்தியாவில் ‘ஸ்கோடா சூப்பர்’ ரக மீண்டும் விற்பனைக்கு வந்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை இந்திய சந்தைப்படி ரூ.54 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ சார்ஜர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் இந்த புது ரக கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 188 பிஎச்பி திறனும், 320 என்எம் தார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், உட்புறம் 13 இன்ச் டிஸ்ப்ளே, எல்க்ட்ரானிக் அட்ஜஸ்ட்டபிள் இருக்கைகள், கேமிராக்கள், 3 ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் சிஸ்டம் போன்ற பல சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி