கடலில் குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை

579பார்த்தது
கடலில் குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை
புதுச்சேரியில் உள்ள கடலில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி நேற்று (ஏப்ரல் 2) இளைஞர்கள் சிலர் கடலில் குளித்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அந்த இளைஞர்களை அழைத்து அங்கிருந்த விழிப்புணர்வு பதாகையில் எழுதியிருந்ததை வாசிக்க வைத்தனர். அதேபோல், சுமார் 500 மீட்டர் தூரம் வரை அந்த இளைஞர்களை நடக்க வைத்து, அனைத்து பதாகைகளிலும் உள்ள வாசகங்களை வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி