வரலாற்று வெற்றியை பதிவு செய்த சன் ரைசர்ஸ் அணி

540பார்த்தது
வரலாற்று வெற்றியை பதிவு செய்த சன் ரைசர்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 278 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக சிக்ஸ் அடிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ் அடிக்கப்பட்டது.

அதே போல், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் முறையே கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளிடம் தோல்வியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி