தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்

163933பார்த்தது
தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக முடித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தேமுதிக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் நிபந்தனைக்கு பாஜக ஒத்துக்கொண்டால் விரைவில் கூட்டணி முடிவாக வாய்ப்பு உள்ளது.