ஆமைக்கறி சாப்பிட்ட 9 பேர் பலி!

569பார்த்தது
ஆமைக்கறி சாப்பிட்ட 9 பேர் பலி!
தான்சானியா நாட்டில் ஆமைக்கறியை சமைத்து சாப்பிட்ட 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்சிபார் பகுதியைச் சேர்ந்த சிலர் கடல் ஆமையை பிடித்துவந்து சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அதில் 9 பேர் சிறிது நேரத்திலேயே இறந்த நிலையில், 78 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சான்சிபார் அதிகாரிகள், ஹம்சா ஹசன் ஜூமா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, கடல் ஆமைகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.