ஒரு கட்டத்தில் கபில்தேவிற்கு பிறகு இந்திய அணி சிறந்த கேப்டன் இல்லாமல் தடுமாறியது. அசாருதீன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிறகு சச்சின் கைக்கு கேப்டன்சி சென்றது. ஆனால், கேப்டனாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. பின் கேப்டன்சி பொறுப்பு சவுரங் கங்குலிக்கு வந்தபோது அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து இந்திய அணிக்கு பல இளம் ரத்தங்களை பாய்ச்சினார். இன்று உலகமே போற்றும் தோனியை இந்திய அணிக்குள் கொண்டு வந்தவர் கங்குலி தான்.