தேர்வுக்கு பயந்து காட்டில் ஒழிந்த மாணவர்கள் - காவலரின் செயல்

55பார்த்தது
தேர்வுக்கு பயந்து காட்டில் ஒழிந்த மாணவர்கள் - காவலரின் செயல்
நீலகிரியில் மலை கிராமம் ஒன்றிற்கு அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று 10 ஆம் வகுப்பு செயல்முறை தேர்வு நடைபெற்றது. இதில் 7 பழங்குடியின மாணவர்கள் பங்கேற்காமல் வனப்பகுதியில் ஒளிந்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அழகரசி மற்றும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் உஷா இருவரும் வனப்பகுதியில் நடந்தே சென்று ஏழு மாணவர்களையும் கண்டறிந்து மீட்டனர். பின்பு மாணவர்களுடன் அன்பாகப் பேசிய பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுதவைத்தனர்.