திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்ற “மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - 2025”ஐ நேற்று (ஜன., 13) அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதுமிருந்து மாணவ, மாணவியர், ஆசிரியர் என 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளையும் பார்வையிட்டு, செயல்பாடு, தொழில்நுட்பம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். சிறப்பான படைப்புகளுக்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.