மலையாள நடிகை ஹனி ரோஸை ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு ஜாமீன் உத்தரவு வெளியாகவுள்ளது. பாபி செம்மனூர் ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன் அமர்வு, பாபியின் ஜாமீன் மனுவை விசாரித்த நிலையில், இன்று மாலை அதற்கான உத்தரவை பிறப்பிக்கிறது.