இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கையில் அவர்களது மனைவியும், குடும்பத்தாரும் உடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மும்பை நகரில் பிசிசிஐ அதிகாரிகள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.