தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சினேகன், கன்னிகா ஆகியோர் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாக தங்களது சமூகவலைதள பக்கத்தில் கடந்த 2024 அக்டோபரில் அறிவித்தனர். இந்த நிலையில் தையில் எங்கள் வாரிசை வரவேற்க காத்திருக்கிறோம், அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள் என கன்னிகா இன்று (ஜன. 14) பதிவிட்டுள்ளார்.