திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை (ஜன. 15) தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. FL1 உரிமம் கொண்ட கடைகள் மற்றும் பார்கள் உட்பட அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களும் மூடப்படும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இன்று (ஜன. 14) மது விற்பனை அதிகமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.