வேத காலண்டரின் அடிப்படையில் இந்தாண்டு சூரிய பகவான் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளன்று காலை 8.44 மணிக்கு மகர ராசியில் நுழைந்தார். மேலும் சூரிய பகவான் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 3 ராசிக்காரர்கள் சூரிய பகவானின் ஆசியை முழுமையாக பெறுவதால், அவர்களுக்கு இந்த நாள் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். அதன்படி மேஷம், சிம்மம், மகரம் ராசியினருக்கு புதிய வேலை, வருமான ஆதாரங்கள், திடீர் பண வரவு, நிதி பிரச்னைக்கு தீர்வு என பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.