விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் SRH அணி

60பார்த்தது
விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் SRH அணி
ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற SRH அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில் அபிஷேக் சர்மா 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிதிஷ் ரெட்டி 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்துவரும் SRH அணி 10 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி வீரர் ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி