திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

63பார்த்தது
திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
விடுமுறை நாள் முடிந்து இன்று(மே 26) பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் செல்வது வழக்கம். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சியில் இருந்து தென்னக ரயில்வே இன்றிரவு இயக்க இருக்கிறது. இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்தை நாளை காலை 6:05 மணிக்கு இந்த ரயில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள், பேருந்தில் இடம் கிடைக்காதவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி