தூத்துக்குடி - சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

53பார்த்தது
தூத்துக்குடி - சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக வருகிற 19-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலானது வருகிற 19-ம் தேதி மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஜன.15) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி