சொதப்பும் மும்பை இந்தியன்ஸ்.. ராஜஸ்தான் ராயல்ஸின் வீரநடை!

55பார்த்தது
சொதப்பும் மும்பை இந்தியன்ஸ்.. ராஜஸ்தான் ராயல்ஸின் வீரநடை!
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சொதப்பல் பெர்ஃபாமன்ஸ் காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 183 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி