அசல் கோளாறுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

54233பார்த்தது
அசல் கோளாறுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிமுகமான இளம்பாடகர் தான் அசல் கோளாறு. இவர் பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானவர். இதன் விளைவாக அவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளையே பெற்று வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அசல் கோளாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெற்றிருந்த சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அசல் கோளாறு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை சம்பளமாக பெற்றுள்ளார். இதன்படி மொத்தம் அவர் ரூ.3.36 லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.