சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். இம்யூனோ மாடுலேட்டிங் மருத்துவ குணம் காரணமாக மிளகானது தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinus), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும், நாள்பட்ட பலனையும் அளிக்கும். அனைத்து உணவிலும் மிளகு சேர்க்கலாம்.