"ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை"

72பார்த்தது
"ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை"
விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற காவல்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.