மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று தனது மகனுடன் ரயிலில் வந்த பெண் இறங்கியுள்ளார். அப்போது அந்த ரயிலில் இருந்து தண்டவாளத்தில் இறங்கி மற்றொரு ரயிலில் ஏறி எதிரே உள்ள பிளாட்பாரத்திற்கு செல்ல முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த ரயில் பெட்டி காலியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்ட போர்ட்டர் ஒருவர் அப்பெண்ணை அவரது மகன் முன் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.