தன் மகனுக்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மத்திய நிதி அமைச்சர்

80பார்த்தது
தன் மகனுக்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மத்திய நிதி அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா், நெற்குப்பை பகுதிகளில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் காா்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்திலேயே மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் அமைந்த ஒரே மாவட்டம் இந்த சிவகங்கை மாவட்டம் தான் பிரதமா் நரேந்திர மோடி ஒவ்வொரு அடியாக சா்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாா் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் அடுத்தது ஒவ்வொரு மாநில கட்சிகளாக ஒழிக்க வேண்டும். பிறகு ஒரே நாடு, ஒரே கட்சி ஒரே தேர்தல் ஒரே தலைவா் என்று முடியும். தில்லி முதல்வா் கைது செய்யப்பட்டு இருக்கிறாா். மற்ற மாநிலங்களில் எத்தனை அமைச்சா்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறாா்கள். ரஷ்யாவில் நடந்தது இந்தியாவில் நடக்காது என்று நினைக்காதீா்கள். என்னுடைய வயது அனுபவத்தை வைத்து சொல்கின்றேன் உங்களை எச்சரிக்கை செய்வது என்னுடைய கடமை. எனவே ஜனநாயகம் காப்பதற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி