மஞ்சுவிரட்டு தொழுவம் தயார் செய்யும் பணி தீவிரம்

75பார்த்தது
மஞ்சுவிரட்டு தொழுவம் தயார் செய்யும் பணி தீவிரம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தைப்பொங்கல் நெருங்கி வருவதையொட்டி மஞ்சுவிரட்டு தொழுவம் தயாராகி வருகின்றன. தென் மாவட்டங்களில் தை முதல் நாள் முதல் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதற்காக மஞ்சுவிரட்டு தொழுக்களை கிராம மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். இத்தாலுகாவில் மார்கழி கடைசி வெள்ளி அன்று நடைபெறும் மு. சூரக்குடி மஞ்சுவிரட்டு, அதைத்தொடர்ந்து மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடைபெறும் சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர், எஸ். எஸ். கோட்டை, எஸ். செவல் பட்டி உள்ளிட்ட மஞ்சுவிரட்டுகளுக்காக அந்தந்த பகுதிகளில் உள்ள மஞ்சுவிரட்டு தொழுவங்கள் மற்றும் அந்தந்த பகுதி மக்களுக்கான தனித்தனி தொழுவங்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. சில நாட்களில் இத்தொழுவங்களில் மாடுகள் அடைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you