திருநெல்வேலி: பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் சக மாணவன், மற்றொரு மாணவனையும், தடுக்க வந்த ஆசிரியரையும் வகுப்பறையிலேயே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முன்கூட்டியே திட்டமிட்டு தனது மகனை அரிவாளால் வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். கை, தலை, காலில் வெட்டுக்காயம் உள்ளதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் மனமுடைந்து கதறியுள்ளார்.