பாஜக மாநில தலைவர் நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவரிடம் அதிமுக தனது வலுவை இழந்துவிட்டதால் தான் கூட்டணி ஆட்சி என பாஜக இழுத்த இழுப்புக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா? என கேள்வியெழுப்பட்டது. அதற்கு, "இது உண்மை இல்லை. அதிமுக வலுவான கட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதற்காக, பாஜக யாரையும் இழுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றார்.