அஜித் படம்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்

76பார்த்தது
அஜித் படம்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்
‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்.10 அன்று வெளியானது. இத்திரைப்படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்' உள்ளிட்ட இளையராஜாவின் சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி